பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16ம் தேதி வண்ணத்துப்பூச்சி பூங்கா திறந்திருக்கும் – மாவட்ட வன அலுவலர் தகவல்
திருச்சி ஸ்ரீரங்கத்தை அடுத்துள்ள மேலூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைந்துள்ளது. முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு அடுத்த இடத்தை இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா பிடித்துள்ளது. பசுமை நிறைந்த இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளும் கல்வி சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு வாரந்தோறும் செவ்வாய் கிழமை விடுமுறை நாள் ஆகும்.
ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 16ம் தேதி ( செவ்வாய்க்கிழமை) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறந்திருக்கும் என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.