திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் சி.க்ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் மேற்பார்வையில், காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக அரியமங்கலம், அம்பிகாபுரம், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, ஆலத்தூர், நத்தமாடிபட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆலத்தூர் பாலத்திலிருந்து மஞ்சத்திடல் செல்லும் சாலையில் இடதுபுறம் ஓரமாக நம்பர் பிளேட் இல்லாத மொபட்டில் இரண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போதுஅவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே முட்புதரில் அடுக்கி வைத்திருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது மொத்தம் 28 மூட்டைகளில் சுமார் 1400 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது அவரது பெயர் ராதாகிருஷ்ணன் என்பதும், திருவெறும்பூர், நவல்பட்டு ரோடு,சுருளிகோவில் தெருவில் வசித்து வந்ததும், மேலகல்கண்டாரகோட்டை, கீழகல்கண்டார்கோட்டை ,ஆலத்தூர் ஆகியபகுதிகளில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இரவுநேர டிபன் கடைகளுக்கு விற்பதற்காகவும், மாட்டு தீவனத்திற்கு விற்பதற்காகவும் கடத்தி வந்து மறைத்து வைத்திருந்து தெரிய வந்தது. அதன்பேரில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
*
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 972
Comments are closed.