லட்சத்தீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டதால்
வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுகிறது என கூற முடியாது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்,
புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசும் தனது பங்காக ₹200 வழங்குகிறது.
பட்ஜெட்டை அறிவித்த புதுச்சேரி முதல்வர்,
அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பாரத பிரதமர் மோடி கூறியதைப் போல புதுச்சேரியை
பெஸ்ட் புதுச்சேரியாக கொண்டு வருவதற்கான அனைத்து
முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்த கேள்விக்கு,
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்
தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம்.
அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
இலங்கை அரசுக்கு சொந்தமான கச்சத் தீவில்,
இலங்கை கடற்படை சார்பில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளதே
என்பது குறித்த கேள்விக்கு
வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுகிறது என கூற முடியாது.
வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற சிலை அமைத்தல் பிரச்சனைகளை கொண்டு வரக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்.
எம்மதமும் சம்மதம் என்பதை நாம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றா
