பாம்பே ஸ்வீட்ஸின் புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகரில் கோலாகல ஆரம்பம்…* அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!
தஞ்சாவூரில் 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க பாம்பே ஸ்வீட்ஸ், திருச்சியில் தனது இரண்டாவது கிளையை ( அக்.12 )துவங்கியுள்ளது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய கிளையை திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை பாம்பே ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணிய சர்மா, உஷா சர்மா, ஜெயலஷ்மி, பிரதீக் ஷிவானி, அஜய், கலா, பிரகாஷ் ஆகியோர் வர வேற்றனர். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு, அர்ச்சனா ஸ்வீட்ஸ் உரிமையாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் சிவக்குமார், வழக்கறிஞர் ராஜ்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். முதல் விற்பனையை தஞ்சை மகாராஜா சில்க்ஸ் முகமது ரபி தொடங்கி வைக்க, அம்மன் டிஆர்ஒய் ஸ்டீல் ‘உரிமையாளர் சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார். விழாவில் மன்னார்குடி சுனில் லுங் கட், பிள்ளை அண்ட் சன்ஸ் சீனிவாசன், தஞ்சை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாண்டுரங்கன், மகாராஜா ரெடிமேட்ஸ் ஆசிப் அலி, குரு ஓட்டல் ரெங்கநாதன், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், நீலமேகம், தஞ்சை மேயர் சண். ராமநாதன், முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன், கவுன்சிலர் மேத்தா, சதய விழா குழுத்தலைவர் செல்வம் மற்றும் வாடிக்கையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பாம்பே ஸ்வீட்ஸ் பிரதீப் கவுர் நன்றி கூறினார். தமிழகத்தின் முதன்முறையாக சந்திரகலா ஸ்வீட்ஸை அறிமுகம் செய்த பாம்பே ஸ்வீட்ஸ், தனது நிறுவனத்தின் சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் இனிப்பு வகைகளுக்காக பிரத்தியேகமாக திருச்சி அண்ணாமலை நகரில் தனது புதிய கிளையை துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.