Rock Fort Times
Online News

பாம்பே ஸ்வீட்ஸ் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்…* தஞ்சாவூரில் மார்ச் 1-ம் தேதி நடக்கிறது !

தஞ்சாவூரை தலைமை இடமாகக் கொண்டு பாம்பே ஸ்வீட்ஸ் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு பட்டுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிலையில், பாம்பே ஸ்வீட்ஸ் நிறுவனர் குருதயாள் சர்மா, துணைவியார் லட்சுமி அம்மா ஆகியோரின் நினைவாக தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், குரு தயாள் சர்மா- லட்சுமி அம்மாள் அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் 26-வது இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர்- நாகப்பட்டினம் மெயின் ரோட்டில் உள்ள குருதயாள் சர்மா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு கண் சிகிச்சை முகாமில் கண்பார்வை குறைபாடுடையோர், கண்புரை, கண் அழுத்த நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை குறைபாடு போன்ற பல்வேறு கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பிரத்தியேக இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொள்ள வசதியாக தஞ்சாவூர் ரயிலடி மற்றும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பாம்பே ஸ்வீட்ஸில் இருந்து முகாம் நடைபெறும் குருதயாள் சர்மா திருமண மண்டபத்திற்கு இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் தகவல்களை பெற விரும்பினால், 04362-230391, 231360, 0431-2555050, 04373-255656 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்