திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி மற்றும் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் தென்னூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் இன்று( ஜூலை 2) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு செயலிழக்கும் அதிகாரிகள் இரண்டு அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் சென்று அங்குலம், அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். நீண்ட நேரம் சோதனை மேற்கொண்டும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார்? எதற்காக மிரட்டல் விடுத்தார், அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.