திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…* அங்குலம், அங்குலமாக வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!!
திருச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று (நவ.12) மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தில்லைநகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு ஆகிய இடங்களில் நவீன கருவி மூலம் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர். அமைச்சர்களின் கார்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. இருந்தாலும், வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபகாலமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் சினிமா நடிகர், நடிகைகள் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.