தமிழக கவர்னர் மாளிகை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. தலைமை அலுவலகம், நடிகர் எஸ்.வி.சேகர் இல்லத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments are closed.