திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கியமான பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனைக்கு பிறகு அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இந்தநிலையில் இன்று(13-10-2024) திருச்சியில் உள்ள பிரீஸ், கண்ணப்பா, கோர்ட் யார்ட் மற்றும் திலகவதி ஆகிய 4 பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெளிநாட்டினர் அதிகம் தங்கும் இந்த ஹோட்டல்களுக்கு இ- மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகர போலீசாருக்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு சென்ற வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டுகளை கண்டறியும் நவீன கருவிகள் மூலம் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் அறைகள் உள்ளிட்ட முக்கியமான அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது. பிரபலமான 4 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்?, எதற்காக மிரட்டல் விடுத்தார்?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments are closed.