திருச்சியில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படும் பி.எல்.ஓ.க்கள்:* நடவடிக்கை எடுக்க அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் கலெக்டரிடம் மனு!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சரவணனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், திருச்சி மாநகரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி( SIR)மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் உள்ள BLO பலர் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் படிவங்களை தி.மு.க. நிர்வாகிகள் BLO-க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல்லாமல் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதற்கு உடந்தையாக செயல்படும் பி.எல். ஓ-க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதிமுக பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறப்பட்டிருந்தது. மனு அளிக்கும்போது பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி என்கிற பூபேந்திரன், கலைவாணன், ரோஜர், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு, பேரவை இணைசெயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, பேரவை துணை செயலாளர் சுரேந்தர், வழக்கறிஞர்கள் முல்லை சுரேஷ், கௌசல்யா, சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.