திருச்சியில் “டி மார்ட்” நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டம் : * தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில நிர்வாகிகள் நாளை முக்கிய ஆலோசனை…!
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சில்லரை வணிகத்தை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான டி-மார்ட் திருச்சியில் ஏற்கனவே இரண்டு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதன் கிளைகளை நிறுவி உள்ளன. இதனால் லட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகள் வியாபாரம் இன்றி தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லரை வணிகத்தை கைப்பற்றும் நோக்கில் படையெடுத்து வருகின்றன. அந்த வகையில் டி-மார்ட் நிறுவனம் திருச்சி வயலூர் ரோடு, வாஸன் வேலி பகுதியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய கிளையை அமைக்க ஆயத்தமாகி வருகிறது. இதனால் அப் பகுதியைச் சேர்ந்த சில்லரை வணிகர்கள் தங்களது வணிகத்தை இழக்க நேரிடுவதோடு கடைகளையும் மூட வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கார்ப்பரேட் நிறுவனமான டி- -மார்ட் புதிய கிளை அமைய உள்ள திருச்சி வாஸன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற இருக்கிறது. இப்போராட்டம் குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நாளை( 01.08.2025) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற இருக்கிறது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.