காஷ்மீர் தீவிரவாத சம்பவத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பாக கலெக்டர் அலுவலகம் அருகே இன்று(05-05-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காளீஸ்வரன், செல்லதுரை, கௌதம் நாகராஜ், ராஜேஷ், சர்வேஸ்வரன், பாலன், வரகனேரி பார்த்திபன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்திய நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க தீவிரவாதிகள் காஷ்மீரில் தாக்குதல் நடத்தி உள்ளனர். உலகளவில் இந்தியாவை பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய நாடாக பாரத பிரதமர் மோடி கொண்டு வருகிறார். இதனை பொறுத்துக் கொள்ளாத தீவிரவாதிகள் இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்டு உள்ளனர்.இவர்களுக்கு கூடிய விரைவில் பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுப்பார். தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கு துணை புரிபவர்களையும் நிச்சயம் பிரதமர் மோடி அழித்து விடுவார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள், வங்காள தேசத்தினரை வெளியேற பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழகத்தில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?. இங்குள்ள சில முஸ்லிம் அமைப்புகள், சில அரசியல் தலைவர்கள் தொடர்ந்து தீவிரவாத கும்பலுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். தீவிரவாதிகளுக்கு துணை போகும் பாகிஸ்தான் மீது பிரதமர் மோடி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில். பாஜக நிர்வாகிகள் இந்திரன், பால்ராஜ், புவனேஸ்வரி ,மலர்கொடி, மல்லி செல்வம், ரெங்கராஜன், வேங்கூர் கார்த்தி, ஊடகப்பிரிவு முரளி, வக்கீல் மாரியப்பன், நாகேந்திரன், எம்பி முரளிதரன், வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள்,வார்டு தலைவர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.