கரூர் விவகாரத்தில் எம்.பி.க்கள் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது பா.ஜ.க.- அமைச்சர் கே.என்.நேரு குற்றச்சாட்டு…!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சிவாஜி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(அக்.1) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட கழக செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது, முறையான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் கரூர் விவகாரத்தில் எம்பிக்கள் குழுவை உடனே அனுப்பி வைத்து இருக்கிறார்கள். தமிழகத்திற்கான எந்த பிரச்சனைக்கும் பாஜக குரல் கொடுக்கவில்லை. எங்கே இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கிறதோ அங்கு அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்குவதற்காக உடனடியாக பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகள் கரூர் விவகாரம் குறித்து தெளிவான விளக்கங்களை அளித்திருக்கிறார்கள். முதல்வர் கூட யாரைப் பற்றியும் குறை கூறாமல் தெளிவான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். வேண்டுமென்றே பிரச்சனையை உண்டு செய்வதற்காக பாஜக இது போன்ற உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி அரசியல் செய்கிறது. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.