Rock Fort Times
Online News

பா.ஜ.க. ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சி காவல் நிலையங்களில் புகார்…!

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்து தவறாக விமர்சித்த பாஜக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சிட்டி பகுதிகளான உறையூர், தில்லை நகர், எடமலைபட்டி புதூர் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட துணை தலைவர், மாவட்ட துணை செயலாளர்கள், பகுதி நிர்வாகிகள், அணிகளின் செயலாளர்கள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்