தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள்(எஸ்ஐஆர்) துரிதமாக நடந்து வருகின்றன. டிசம்பர் 4 ம் தேதி வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விஜயின் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி பாஜக அலுவலகத்தில் எஸ்ஐஆர் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று(22-11-2025) நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வருகிற 2026 ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாக்களிக்கும் உரிமை உள்ள அனைவரையும் எஸ். ஐ. ஆர். பட்டியலில் இணைக்க வேண்டும், போலி வாக்காளர்கள் கண்டறிந்து அவர்களைப் பெயர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.