திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு உயரிய தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது என அக்கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அக் கல்லூரியில் நேற்று ( 22.09.2023 ) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கல்லூரி தலைவர் டி. சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் டி. பால்தயாபரன் ஆகியோர் கூறியதாவது:
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தரமான உயர் கல்வியை வழங்குவதற்கான தேடலில் ஒரு குறிப்பிட்ட மைல் கல்லை எட்டியுள்ளது. தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார நிறுவனமான நாக் (என்.ஏ.ஏ.சி) அமைப்பு, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரிக்கு 4 ஆவது சுழற்சியில் ஏ++ எனும் உயர் மதிப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. குறிப்பாக, பிஷப் ஹீபர் கல்லூரி நான்கு புள்ளிகளுக்கு 3.69 சிஜிபிஏ மதிப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாக் மதிப்பீட்டு சுழற்சிகளில் 4 + மற்றும் ஏ 4 புள்ளிகளுக்கு 3.58 சிஜிபிஏ தரத்தை பெற்றிருந்தது என்று தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.