நவம்பர் 9-ம் தேதி பிறந்தநாள்: என்னை பார்க்க தொண்டர்கள் நேரில் வர வேண்டாம்… * அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள்!
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருகின்ற ஒன்பதாம் தேதி எனது பிறந்தநாள். அன்று நான் திருச்சியில் இல்லை. அதனால் அன்றைய தினம் என்னை பார்ப்பதற்காக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட எனது நலம் விரும்பிகள் அனைவரும் என்னை பார்ப்பதற்கு எனது இல்லத்திற்கோ, அலுவலகத்திற்கோ நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் யாரும் எந்த நிகழ்ச்சிகளும் எனது பிறந்த நாளுக்காக நடத்த வேண்டாம் என்றும் மீண்டும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.