Rock Fort Times
Online News

மக்கும் குப்பை மக்காத குப்பை விழிப்புணா்வு…

மேயா் அன்பழகன் பங்கேற்பு...

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் – 5, வார்டு 27-ல் எனது குப்பை, எனது பொறுப்பு எனும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்குவதன் அவசியம் குறித்து இன்று ( 12.09.2023 ) மேயர் அன்பழகன், விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வைப்பதற்காக பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மண்டலத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன், சுகாதார அலுவலர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் பிரசாத், மாமன்ற உறுப்பினர் கமல் பாட்சா, பள்ளிவாசல் நிர்வாகிகள், சர்குலர் வேஸ்ட் சொலுஷன்ஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்