Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம்- காணிக்கையாக வழங்கினார் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர்உசேன்…!

108 வைணவ தலங்களில் முதன்மையாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு பக்தர் ஒருவர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாக வழங்கி உள்ளார். பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன், இன்று(11-12-2024) ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். பின்னர் அவர், பல கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரியப்பன், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர், முரளி பட்டர் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி மேல் உள்ள பக்தியால் இந்த வைர கிரீடத்தை காணிக்கையாக அளித்துள்ளேன். ஏறத்தாழ அரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடமானது 3160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஒற்றை மாணிக்க கல் கொண்டு வரப்பட்டு குடைந்து எடுக்கப்பட்டு, 400 கிராம் தங்கத்தில் வைரம், மரகத கற்கள் பதிக்கப்பட்டு ள்ளது. இதனை வடிவமைப்பதற்கு ஏறத்தாழ 8 ஆண்டுகள் ஆனது. உலகில் முதல் முறையாக
மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைரக் கிரீடம் இது என்பது இதன் தனி சிறப்பாகும் என்றார். பிறப்பால் தான் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ஆனால், அதற்கான செலவுத் தொகையை குறிப்பிடவில்லை. இருந்தாலும் இதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

🔴ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கைசிக ஏகாதசி 365 வஸ்த்திரங்கள் சாற்றப்படும் வைபவம்

1 of 939

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்