Rock Fort Times
Online News

பள்ளி மாணவிகளை விரட்டி, விரட்டி கடித்த தேனீக்கள் !

திருச்சி மாவட்டம் தா.பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயிலும் 10, 11, 12 -ம் வகுப்பு மாணவிகளுக்கு இன்று சிறப்பு வகுப்பு நடந்தது. சிறப்பு வகுப்பில் பங்கேற்பதற்காக 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வந்து கொண்டு இருந்தனர். பள்ளிக்கு செல்லும் வழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இருக்கும் அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் மீது சில வாலிபர்கள் கல் வீசியதாக கூறப்படுகிறது. இதனால், தேன் கூடு கலைந்து பள்ளி மாணவிகளை தேனீக்கள் கொட்டத் தொடங்கின. இதனால், வலி தாங்க முடியாமல் மாணவிகள் அங்கும் இங்கும் ஓடினர். இருந்தாலும் மாணவிகளை தேனீக்கள் விரட்டி சென்று கடித்தன. அந்த வழியாக சென்ற பொது மக்களையும் தேனீக்கள் கடித்தன. தேனீக்கள் கடித்ததில் மாணவிகள் சிலரும், பொதுமக்கள் ரோகித், சுந்தர்ராஜ் ஆகியோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கணேசன் மாணவிகளை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்