Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்: ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அதிமுகவினர் போராட்டம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளதால் அதிமுக உள்ளிட்ட பிரபல கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர். அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரம் முன்பாக அதிமுகவினர் பேனர் வைத்திருந்தனர். அந்த பேனர்களை காவல் துறையினர் அகற்றினர். இந்நிலையில் பேனர்களை அகற்றிய காவல் துறையினரையும், மாநகராட்சி அதிகாரிகளையும், தமிழக அரசையும் கண்டித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு பரஞ்சோதி தலைமையில் முன்னாள் அமைச்சர், அமைப்புச் செயலாளர் வளர்மதி, அமைப்பு செயலாளர் முன்னாள் கொறடா மனோகரன், மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் புல்லட்ஜான் , மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மாவட்ட அவைத் தலைவர் சமயபுரம் ராமு, மீனவரணி கண்ணதாசன், மாணவரணி அறிவழகன், எம்ஜிஆர் மன்றம் அறிவழகன் விஜய், ஒன்றிய செயலாளர்கள் முத்து கருப்பன், கோப்பு நடராஜ், ஜெயக்குமார், பகுதிச் செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், ஐ.டி. பிரிவு திருப்புகழ் , இளைஞர் அணி தேவா, புங்கனூர் கார்த்திக், நிர்வாகிகள் வி.என் ஆர்.செல்வம், ரவிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஸ்ரீரங்கம் சரக காவல் உதவி ஆணையர் சீதாராமன் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருவனந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டதாக போலீசார் எடுத்துக் கூறினர். அதனை ஏற்றுக் கொண்ட அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்