புனேவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அவர், சேலத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் பயணம் செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதாப் சர்கார் என்ற வாலிபர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உடனே மின்னஞ்சல் மூலமாகவும், டிக்கெட் பரிசோதரிடமும் அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். அதனைத்தொடர்ந்து அந்த ரயிலானது ஈரோடு வந்தபோது புகார் எழுந்த பெட்டிக்கு சென்ற ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது உண்மை என தெரிய வந்தது. அதன்பேரில், ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதாப் சர்கார் (24)என்ற அந்த வாலிபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
Comments are closed.