புதிய தொழில் முனைவோருக்கு ரூ.6 கோடி மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி…!- கே.என்.அருண் நேரு எம்.பி. வழங்கினார்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பெண்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் திருச்சி சமயபுரம், ரெட்டியார் மஹாலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான சிறப்பு முகாமை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிகளை வழங்கி விழா பேருரையாற்றினார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மூலதன முதலீட்டு மானியம், மின்சார மானியம், பிணையில்லாத வங்கி கடனுதவிக்கான வட்டி மானியம், தரச்சான்று மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய தொழில் முனைவோர்களுக்கு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் தொழில்களை முறைபடுத்தும் திட்டம், கலைஞரின் கைவினைத் திட்டம் உள்ளிட்ட மானியத்துடன் கூடிய வங்கி கடன் திட்டங்கள் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இந்த திட்டங்கள் குறித்து படித்த இளைஞர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர் அறிந்திடும் வகையிலும் ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் தங்களது நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முன்னதாக தாட்கோ, மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தேசிய சிறுதொழில் கழகம், புத்தாக்க தொழில்கள், தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவில், சட்டமன்ற உறுப்பினர்கள் சீ.கதிரவன், ந.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மா.இராமலிங்கம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் கோ.ஸ்ரீராம், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் சு.மதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், சி.ஐ.ஐ துணைத் தலைவர் வெ.சிவராமகிருஷ்ணன், டான்ஸ்டியா துணைத் தலைவர் பெ.குமார், மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் சங்க தலைவர் ராஜப்பா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கோ.நாகராஜ் சிவக்குமார், தாட்கோ மேலாளர் ரெ.விஜயகுமார், மாவட்ட செயல் அலுவலர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செ.ஜெயபிரகாஷ், தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானிகள் கே.என்.கிருஷ்ணா, சி.கற்பகம், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர்கள் கோ.எஸ்தர்ராணி, கோ.கிரீசன் மற்றும் வங்கியாளர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், தொழில் சங்க பிரதிநிதிகள், புதிய தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.