கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் வா.புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆகியதென்று தெரியவில்லை, அவருக்கு மென்டலி பிராப்ளம்னு பேசி கொள்கிறார்கள். ஜெயலலிதாவை தவறாக பேசிய விவகாரம் கர்நாடகா மாநிலத்தில் பரவினால் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும். அங்குள்ள தமிழர்கள் மதிக்கவே மாட்டார்கள். உங்களை கீழ்பாக்கத்திலோ அல்லது பெங்களூர் நிமான்சிலோ மருத்துவமனையிலோ சென்று சுய பரிசோதனை செய்துதுக்கொள்ளுங்கள். அம்மா இருந்தபோது அண்ணாமலை இப்படி எல்லாம் பேசி இருந்தால், இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருப்பார்.மத்தியில் பா.ஜ.கவை ஆட்சியில் அமர வைத்ததும், இறக்கியவரும் அம்மாதான். பாஜக தலைவரே பண்பாட்டை கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நாவடக்கம் தேவை. நேற்று அதிமுக கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஜெயக்குமார் முதலில் பாஜகவை திட்டியும் கூட்டத்திற்கு பிறகு பாஜக உடன் கூட்டணி தொடரும் என்கிறார். எடப்பாடி அணியில் உள்ள அனைவரும் அறை மென்டல்கள், முழு மென்டல்களாக உள்ளனர். அண்ணாமலைக்கு கடைசி எச்சரிக்கை அம்மா, எம்ஜிஆர் குறித்து பேசினால் இனி வெளியில் நடமாட முடியாத நிலையை நீங்கள் அடைவீர்கள். உள்ளாட்சி, நகர்புறம், சட்டமன்றம், நாடாளுமன்றம், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் எடப்பாடி டேக்கிட் இட் ஈஸி பாலிசி என்றே இருக்கிறார். ஓபிஎஸ் என்கிற ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் அதிமுக எதிலும் வெற்றி பெற முடியாது. அதிமுக வேட்பாளரின் வார்டிலேயே வாக்குகள் பெற முடியவில்லை எனத் தெரிவித்தார் புகழேந்தி.

**mitolyn reviews**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.