விவசாயிகளின் நலன்கருதி முசிறியில் வாழைப்பழ குளிர் பதன சேமிப்பு கிடங்கு அவசியம்…- நாடாளுமன்றத்தில் பெரம்பலூர் எம்.பி. அருண்நேரு வலியுறுத்தல்!
டெல்லியில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், பெரம்பலூர் எம்.பி. என்.அருண்நேரு பங்கேற்று மக்களவை விதி 377ன் கீழ் பேசுகையில்,
காவிரி நதிக்கரையில் வளமாக விளையும் முசிறி, தொட்டியம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகள் மாநிலத்தின் முக்கிய வாழைப்பழ உற்பத்தி மையங்களாகும். பூவன், ரஸ்தாலி, நேந்திரன் போன்ற பல்வேறு இனங்கள் இங்கு விளைவிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால், இப்பகுதியில் நவீன குளிர்பதன சேமிப்பு வளாகங்கள் இல்லாத காரணத்தால், விவசாயிகள் அறுவடை காலங்களில் வாழைப் பழங்களை மிகக் குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு பெரும் நிதி இழப்புகள் ஏற்படுகின்றன. ஆண்டு முழுவதும் பாடுபட்ட உழைப்பும் வீணாகின்றது. திருச்சிராப்பள்ளியில் தேசிய வாழைப்பழ ஆராய்ச்சி மையம் இருப்பது இப்பகுதியின் மூலதன முக்கியத்துவத்தை காட்டுகிறது. எனவே, முசிறியில் பெரிய அளவிலான நவீன குளிர்பதன சேமிப்பு வளாகம் அமைப்பதற்கு மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Comments are closed.