Rock Fort Times
Online News

திருச்சியில் சாக்கடை அருகே சிசு உடல் வீச்சு- கல் நெஞ்சம் படைத்த தாய்க்கு வலை…!

திருச்சி பாலக்கரை அருகே உள்ள துரைசாமிபுரம் இரண்டாவது தெருவில் உள்ள சாக்கடையின் ஓரத்தில் இறந்த குழந்தையின் சிசு கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் மூன்று அல்லது நான்கு மாதமே ஆன சிசு ஒன்றின் உடல் வீசப்பட்டு கிடந்தது.

அந்த சிசுவின் உடலை மீட்ட போலீசார், சிசுவின் உடலை வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்