ஆயுத பூஜை நாளை(11-10-2024) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமக்கு வருவாய் ஈட்டி கொடுத்த எந்திரங்களையும், பஸ், லாரி, வேன், ஆட்டோ போன்ற வாகனங்களையும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து, படையல் இட்டு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து வழிபடுவது இந்நாளின் சிறப்பு ஆகும். ஆயுத பூஜையையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை மூட்டையாக பொறி, பொட்டுக்கடலை, அவல், வாழைப்பழம், சந்தனம், குங்குமம், வாழை இலை, காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்கள் படு ஜோராக விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் காந்தி மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதுகிறது. பூஜை பொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று அதிகமாக தான் இருக்கிறது. குறிப்பாக பூக்களின் விலை தாறுமாறாக எகிறி உள்ளது. பூஜைக்கு பூக்கள் முக்கியம் என்பதால் காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட் போன்ற இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அங்கு பூக்களின் விலையை கேட்டு பொதுமக்கள் திகைத்து நின்றனர். அதாவது ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.650-க்கு விற்கப்படுகிறது. மற்ற பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ஸ்ரீரங்கம் மார்க்கெட்டில் பூக்கள் விலை நிலவரம் :-
செவ்வந்தி பூ(1 கிலோ) – ரூ.300
பன்னீர் ரோஸ் – 250
ரோஜா – 400
அரளி பூ – 500
விச்சிப்பூ – 250
மல்லிகை பூ – 650
முல்லை பூ – 360
சம்பங்கி பூ – 300
இதன் விலை மேலும் உயரக்கூடும் என்றே தெரிகிறது.
Comments are closed.