திருச்சி, பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது. ரயில் பெட்டிகளை பழுது பார்த்தல், புதிதாக உருவாக்குதல் போன்ற பணிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிமனை தொடங்கி 98 வருடங்கள் ஆகிறது. இந்த பணிமனையில் இன்று(10-10-2024) ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யும் பகுதியை சுத்தம் செய்து அலங்காரம் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் வேலை பார்க்கும் ஆயுதங்களை வைத்து படையல் இட்டு பூஜை செய்தனர். இதில், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர், வட மாநில பெண்கள், குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். பொதுவாக ஆயுத பூஜைக்கு முதல் நாள் பணிமணியை சுற்றி பார்க்க ஒரு நாள் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அந்தவகையில் இன்று பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பணிமனையை சுற்றிப் பார்த்தனர். சென்ற ஆண்டு (2023) தண்ணீர் அமைப்பு சார்பில் டீசல் பிரிவு ஒரு பகுதியில் துணிப்பை, மரக்கன்று, புத்தகங்கள் வழங்கி கொண்டாட்டப்பட்டது. இந்த ஆண்டு விதைப்பந்து, பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக “பிளாஸ்டிக் என்ற எமன் ” என்ற புத்தகத்தை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் டீசல் பிரிவு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், பெரியசாமி , செந்தில்நாதன், நளினி, திவ்யா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.


Comments are closed.