திருச்சியில் ரயில்வே சிறப்பு காவல்படை சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று (ஜூலை 5) நடைபெற்றது. ஐந்தாவது படைப்பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்புபடை வீரர்கள் கையில் துப்பாக்கி ஏந்தியவாறு மிடுக்குடன் அணிவகுத்து நின்றனர்.
பேரணியை ரயில்வே சிறப்பு பாதுகாப்புபடை கமாண்டிங் ஆபிசர் சீனிவாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், உதவி கமாண்டிங் ஆபிசர் ஏ.கே.பிரித், ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி கோட்ட உதவி ஆணையர் பிரமோத்நாயர், காளி நிர்மலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மத்திய பேருந்து நிலையம் வரை சென்ற விழிப்புணர்வு பேரணி மீண்டும் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது அவர்கள் பொதுமக்களிடையே போதை பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Comments are closed.