திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 18-வது சமரச தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி பாபு தலைமை தாங்கினார். பின்னர் சமரச தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை நீதிபதி பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீதிமன்றத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் திருச்சி மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்று மீண்டும் நீதிமன்றத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

