திருச்சி வடக்கு காட்டூர் குழந்தைஏசு தெருவில் வசித்து வந்தவர் டேவிட்ரீகன்(வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் டேவிட்ரீகன் திருச்சி ஆர்.எம்.எஸ். காலனி விரிவாக்க பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கட்டிடத்தில் ஞாயிறு அன்று வேலை செய்து கொண்டிருந்தார். அந்த கட்டித்தின் மேல் சென்ற மின் கம்பி மீது எதிர்பாரதவிதமாக டேவிட்ரீகன் உடல் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார் .மேலும், இவருடன் வேலை செய்த இருவரும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், டேவிட் ரீகன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மாதர், வாலிபர் சங்கத்தினர் மற்றும் டேவிட்ரீகன் குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.