திருச்சி, சிங்காரத்தோப்பு பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இஷபெலியா ராஜகுமாரி என்பவர் முதல்வராக உள்ளார்.
இவர் தனது அறையில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நிரப்பிய பாட்டில் மற்றும் கத்தியுடன் அத்துமீறி கல்லூரிக்குள் புகுந்தார். பின்னர், நேராக முதல்வர் அறைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதோடு தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் விசாரணையில் கல்லூரி முதல்வரை தாக்கியவர் திருச்சி கிராப்பட்டி நான்காவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த லாலி கிளின்டன் (வயது 40 )என்பது தெரியவந்தது. இவர் நாமக்கல்லில் இதே கல்லூரிக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரை நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இங்கு வந்து தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.
Prev Post

Comments are closed.