Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ராப்பத்து 9ம் நாள்: முத்து கபாய் அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவம் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகின்றன. ராப்பத்து உற்சவத்தின் 9ம் நாளான இன்று (ஜன.7) நம்பெருமாள் அபூர்வமான முத்து கபாய் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இந்நாளில் நம்பெருமாள் திருமேனியில் முத்து நேர் கிரீடம் சாற்றப்பட்டு, அதில் தொங்கல் சுட்டி பதக்கம் அணிவிக்கப்பட்டது. திருக்காதுகளில் மகர கர்ண பத்ரம் சாற்றப்பட்டு, திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம் மற்றும் புட்டாபூர் பதக்கம் அணிவிக்கப்பட்டது. மேலும் வைர அபய ஹஸ்தம், வைரக்கல் அடுக்கு மகர கண்டிகை பதக்கங்கள் சாற்றப்பட்டு இருக்கின்றன. முத்தும், வைரமும் பொலிவுடன் விளங்கும் இந்த அலங்காரம், நம்பெருமாளின் தெய்வீக திருமேனிக்கு கூடுதல் அழகு சேர்த்தது. இந்த சிறப்பு சேவையை தரிசிக்க திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் கூடி, “ரெங்கா ரெங்கா” என்ற நாமகோஷம் முழங்க நம்பெருமாளின் அருளைப் பெற்று வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்