ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 4ம் நாளில் பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி, அதில் சிறிய நெற்றி சுட்டி, மகர கர்ண பத்ரம் அணிந்து, வைரஅபய ஹஸ்தம் சாற்றி, திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம், அதன்மேல் ஸ்ரீ மகாலட்சுமி பதக்கம், மகரி, கஜலட்சுமி பதக்கம், அடுக்கு பதக்கங்கள், தங்கபூண் பவள மாலை, 2 வட முத்து மாலை, மரகதகிளி பெரிய ஹாரம், மஞ்சள் வண்ண பீதாம்பர பட்டு அணிந்து பின் சேவையாக சிகப்புக் கல் சூர்ய பதக்கம், புஜகீர்த்தி அணிந்து சேவை சாதிக்கிறார்.

Comments are closed.