தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ் மொழியை காக்க தீக்குளித்து உயிர் நீத்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடம் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ளது. இன்று (25-01-2024) மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அமமுக மாநில அமைப்பு செயலாளர் ராஜசேகரன், மாவட்ட செயலாளர்கள் கவுன்சிலர் செந்தில்நாதன், கலைச்செல்வன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், கட்சியின் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், காசி மகாராஜன், நாகநாதர் சிவகுமார்,மாணவரணி நாகூர்மீரான், லதா, கல்நாயக், சதீஷ், தருண்,ராஜ் முகமது மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.