தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் ஒவ்வொரு நாற்காலி தோறும் பிரியாணி, கூல்ட்ரிங்ஸ், பிஸ்கட் அடங்கிய பைகள்…!
தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு பூத்துக்கு 10 பேர் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளிலிருந்து மொத்தம் 1.25 லட்சம் பேர் சீருடையில் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக அவர்கள் அமரும் நாற்காலிகள் தோறும் பைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில், சிக்கன் பிரியாணி வைக்கப்பட்ட ஹாட் பாக்ஸ், மேரி கோல்டு, குட் டே பிஸ்கட், பாதுஷா, மிக்சர் காரம், தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் உள்ளிட்டவை இருந்தன. அதனை பெண்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Comments are closed.