Rock Fort Times
Online News

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார் அஸ்வின்… !

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்தன. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வந்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் யாருக்கும் வெற்றி, தோல்வி இன்றி இன்று(18-12-2024) டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் இதுவரை 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டு மொத்தமாக 765 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்