தமிழ்நாட்டில் இந்த கோடைகாலத்தில் மின்தடை இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு டாங் கெட் கோ தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. கடந்தாண்டு கோடைகாலத்தில் மின்தடை இருந்த நிலையில் இந்த ஆண்டு அதுபோல் மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின் பேரில், மின்சார வாரியம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அவசர காலம் தவிர மின்சப்ளையை நிறுத்தக்கூடாது என கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இபி தொடர்பான புகார்களை இனி TANGEDCO என்ற செயலியில் அளிக்கலாம். இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக லாகின் செய்து உங்கள் புகாரை அளிக்கலாம். இதில் லாகின் செய்த பின் உங்கள் இபி நம்பர் மற்றும் போன் எண்ணை வழங்க வேண்டும். அதன்பின் எந்த மாதிரியான புகார் என்பதை கொடுக்க வேண்டும். மின்தடை, மீட்டர் பழுது, கூடுதல் மின் கட்டண வசூல் உள்ளிட்ட புகார்களை இனி செல்போன் 2 செயலியில் புகார் அளிக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது TANGEDCO மின்னகத்தின் நுகர்வோர் சேவை மைய எண்ணான
94987 94987 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
1
of 917
Comments are closed, but trackbacks and pingbacks are open.