திருச்சி மாவட்டம் வையம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் 1 சதுரடி 400 ரூபாய் வீதம் 1200 சதுரடிக்கு ரூ.4,80,000 கட்டினால் முதலீட்டாளர்களுக்கு அந்த தொகைக்கு உண்டான காலிமனையை இலவசமாக தருவதாகவும், பத்திரம் பதிவு செய்வதற்கு உண்டான தொகையை நிறுவனமே செலுத்தி விடுவதாகவும், மாதந்தோறும் கட்டும் வகையில் மனை சீட்டு நடத்துவதாகவும், இந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பொதுமக்களை சேர்த்து விடுபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் பொதுமக்களிடம் ஆசைவார்த்தை கூறி ஏமாற்ற முயல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பொதுமக்களை ஏமாற்றும் வகையில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து முதலீட்டில் ஈர்க்க முயன்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.