Rock Fort Times
Online News

கணவரின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த காதல் மனைவி கைது…

திருச்சி மாவட்டம் துறையூர் தேவாங்க நகர் பகுதியில் வசித்தவர் அண்ணாதுரை. இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பத்மினி என்ற பெண்ணை 30 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் லலிதா என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்தார். முதல் மனைவி பத்மினி வீட்டின் முதல் தளத்திலும், லலிதா கீழ் பகுதியிலும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதற்கிடையில் அண்ணாதுரை தினமும் குடித்துவிட்டு வந்து பத்மினி மற்றும் லலிதாவிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. வழக்கம்போல, குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அண்ணாதுரை பத்மினியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் , ஆத்திரம் அடைந்த பத்மினி கயிற்றால் கணவரின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பத்மினியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். கணவரை, மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்