Rock Fort Times
Online News

மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது…!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஐஎம்ஓ என்ற செயலி மூலமாக, சொக்கநாதன் என்ற ஐடியில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  இந்து மதத்தில் இருந்து விலகி,கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவர் கூறியுள்ளார். மேலும், உங்களது பெயரில் அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும், வருமான வரி செலுத்தவேண்டும் அதற்காக ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். இதை நம்பிய கோவில்பட்டி இளைஞர், அந்த நபர் அனுப்பிய எண்ணிற்கு  ரூ.4,88,159-ஐ ஜிபே மூலம் அனுப்பியுள்ளார். அதன்பிறகு அந்தநபரை தொடர்புகொள்ள முடியவில்லை.  இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்,தேசிய சைபர் குற்றப் பிரிவு இணையதளத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.  விசாரணையில், இந்த மோசடியில் ஈடு பட்டது தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை ஆனந்தம் நகரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஜவேலை கைது செய்த போலீஸார்,  அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்