திருச்சி அரியமங்கலம் பகுதியில் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டிய ரவுடி கைது- போலீஸ் கமிஷனர் அதிரடி…
குண்டா் சட்டத்தில் கைது செய்ய பொதுமக்கள் கோாிக்கை..
திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெருவை சேர்ந்தவர் தெய்வ மணிகண்டன் (வயது 41). இவர் சொந்தமாக டூரிஸ்ட் வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் அரியமங்கலம் வடக்கு உக்கடை பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அவரை கணேசன் என்கிற கஞ்சா கணேசன் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2500 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து தெய்வ மணிகண்டன் அாியமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதேபோல தீப்பெட்டி கம்பெனி தெரு, மலையடிவாரம் பொதுமக்கள் அாியமங்கலம் காவல் நிலையத்தில் கஞ்சா கணேசன் மீது ஒரு புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில், கஞ்சா கணேசன் உக்கடை அாியமங்கலம், மலைமேல் மற்றும் மலை அடிவாரம் தீப்பெட்டி கம்பெனி தெரு பகுதிகளில் வசிக்கும் எங்களை கத்தியைக் காட்டி மிரட்டி வருகிறாா். இரவு நேரங்களில் துாங்க விடாமல் வீடுகளின் மீது கற்களை வீசியும், கதவை உடைத்தும் கஞ்சா போதையில் ரகளை செய்து வருகிறாா். மேலும் குடிநீா் குழாய்களை சேதப்படுத்தியும், அங்குள்ள வியாபாாிகளை மிரட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொிவித்திருந்தனா்.
இந்த புகாா்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அாியமங்கலம் போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனா் என்.காமினி ஐபிஎஸ் உத்தரவிட்டாா். அதன்போில் கஞ்சா கணேசனை போலீசாா் கைது செய்தனா். பின்னா் அவரை திருச்சி 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கஞ்சா கணேசன் மீது அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அடிதடி ,செயின் பறிப்பு, கஞ்சா விற்றது உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், இவா் அப்பகுதியில் ரவுடி போல செயல்பட்டதும், இதன் காரணமாக இவா் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்களை தொடா்ந்து அச்சுறுத்தி வரும் இவரை மீண்டும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.