திருச்சி மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 50 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு..!
திருச்சி,பஞ்சப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வருகிற மே 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் சுமார் 50,000 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் எந்தெந்த பகுதிகளில் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்பதை கண்டறிந்து, அதற்கான தடையில்லா சான்று வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Comments are closed.