ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மொத்தம் 17 வீரர்களுடன், உயரமான பகுதியில் உள்ள ஒரு முகாமை நோக்கி ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. பதேர்வா – சம்பா சாலையில் உள்ள கன்னி டாப் என்ற இடத்தில் அந்த வாகனம் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடனேயே, காயமடைந்த வீரர்களை வெளியேற்றுவதற்காக ராணுவம், காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. உள்ளூர் மக்களும் உதவியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே நான்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும், படுகாயமடைந்த சில வீரர்கள் சிறப்பு சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர். இருந்தாலும் அங்கு சிகிச்சையில் இருந்த 6 வீரர்கள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

Comments are closed.