Rock Fort Times
Online News

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் கோவை வருகை!

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடல் கோவை கொண்டுவரப்பட்டது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரத்தில் உள்ள ராணுவ தளத்தில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.உயிரிழந்த வீரர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த யோகேஷ் குமார், மற்றொருவர் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கமலேஷ் ஆவர். இந்நிலையில் உயிரிழந்த இராணுவ வீரர் கமலேஷின் பூத உடல் விமானம் மூலம் கோவை கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அவரது உடலுக்கு இராணுவ வீரர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமரர் ஊர்தி மூலம் கமலேஷின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்