பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீஸார் பலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக, காங்கிரஸ், பாஜக, அதிமுக எனப் பல கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு, பிரபல டைரக்டர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளியிடம் மோனிஷா பலமுறை தொலைபேசியில் பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. மோனிஷாவை தொடர்ந்து டைரக்டர் நெல்சனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. இது, தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Comments are closed.