திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சமயபுரம் நோக்கி ஒரு அரசு பேருந்து புறப்பட தயாரானது. அந்த பேருந்தில் கிழியநல்லூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் வயது 54 என்பவர் கண்டக்டராக இருந்தார். பயணிகள் ஏறியதை தொடர்ந்து அவர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார் .அப்போது ஒரு வாலிபர் கண்டோன்மெண்ட் பகுதிக்கு டிக்கெட் கேட்டார். அதற்கு கண்டக்டர் கண்டோன்மெண்டுக்கு பஸ் செல்லாது. கீழே இறங்கு என தெரிவித்தார். அப்போது கண்டக்டருக்கும் அந்த பயணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கண்டக்டரை கெட்ட வார்த்தையால் திட்டி கல்லால் அடித்தார். மேலும் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்து விட்டு தப்பி ஓடினார். இது குறித்து கதிர்வேல், கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் திருச்சி வடக்கு தாரா நல்லூர் சூரன்சேரி பகுதியைச் சேர்ந்த கருணாகரன் 27 என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.