திருச்சி மண்ணச்சநல்லூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 38). இவர் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான பாரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மற்றும் மதுபான கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அப்போது சத்திரம் பாரில் நின்று கொண்டிருந்த பிரகாஷிடம் திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த அபி என்கிற அபிஷேக் (வயது 19),திருச்சி மேல சிந்தாமணி கொசமேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த ரவுடி சிவகுரு (22) மண்ணச்சநல்லூர் வலையூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (18) ஆகிய 3 பேரும் சென்று அவரிடம் மதுபானம் கேட்டுள்ளனர். அவர் இன்று விற்பனை கிடையாது என்று தெரிவித்துள்ளார். அதை ஏற்க மறுத்த 3 பேரும் அவரை கெட்ட வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்து ,அங்கிருந்த சிசிடிவி கேமராவை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து பிரகாஷ் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ரௌடி சிவகுரு உள்ளிட்ட மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
