இன்று ஏப்ரல் 1ஆம் தேதி .புதிய நிதியாண்டின் தொடக்க நாள் .இன்றைய நாளில் ஒவ்வொருவரும் வீடுகளிலும் தங்களது வியாபார நிறுவனங்களிலும் புது கணக்கு தொடங்குவது வழக்கம். இன்றைய நாள் ஏகாதசி பூசம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது .இன்று காலை 7.30 மணி முதல் 8:30 மணி வரையிலும் 10:30 மணி முதல் 11:30 மணி வரையிலும் பலர் புது கணக்குகளை தொடங்கியுள்ளனர். மேலும் பலர் மாலை நேரத்தில் புது கணக்கு தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்காக சில வழிகாட்டுதல்கள். இன்று இரவு 9 மணி முதல் 10 மணி வரை புது கணக்கு தொடங்க நல்ல நேரம். வியாபார நிறுவனத்தில் புது கணக்கு தொடங்க முடிவு செய்திருந்தால் வீட்டில் ஆண்களாக இருந்தால் என்னை தெய்த்து குளியுங்கள். பெண்களாக இருந்தால் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். வியாபார நிறுவனங்களில் புது கணக்கு தொடங்க விரும்பும் ஆண்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அல்லது மனைவியிடமோ ஐம்பது ரூபாய் அல்லது 100 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள். வியாபார நிறுவனத்தில் வழக்கம்போல் நீங்கள் பூஜை நடத்தும் இடத்தில் அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வையுங்கள் . வீட்டிலிருந்து கொண்டுவந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக கட் பண்ணி இரண்டு மூலையில் வைத்து விடுங்கள். புதிதாக ஒரு புது கணக்கு தொடங்க ஒரு நோட்டு வேண்டும்.அதையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் . ஒரு அகல் விளக்கில் கல் உப்பு விளக்கு ஏற்றுங்கள் .ஒரு பிரிஞ்சி இலை அதாவது பிரியாணி இலை என்று சொல்வார்கள் அதையும் வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிலிருந்து வாங்கி வந்த பணத்தை கல்லாப்பெட்டிக்கு கீழேயோ அல்லது சாமிக்கு முன்பாகவோ வைத்து பிரியாணி இலையில் இந்த ஆண்டு நீங்கள் எத்தனை கோடி சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த இலக்கத்தை எழுதுங்கள் .அதை ஏற்றி வைத்த உப்பு விளக்கில் எரித்து விடுங்கள். வீட்டிலிருந்து வாங்கி வந்த பணத்தை மஞ்சள் குங்குமம் புனுகு தடவி கல்லாப்பெட்டிக்கு கீழேயோ அல்லது சாமி விளக்குக்கு முன்பாகவோ வைத்து விடுங்கள். பூஜை நேரத்தின்போது மஞ்சள் நிற இனிப்பு வகைகளை அதாவது லட்டு போன்ற இனிப்பு வகைகளை படைக்கலாம். பூஜையின் போது அவர்கள் ராசிக்கு ஏற்ற நிறத்தில் ஆடைகளை அணியலாம் .அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணியலாம். தேங்காய் உடைத்து ஊதுபத்தி காட்டுங்கள். ஆண்களாக இருந்தால் பூஜையின் போது’ ஓம் ஸ்ரீம் லலிதம் லம்போ தனம்’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும் .இந்த மந்திரம் எதிர்பாராத பணம் தரும் மந்திரம் ஆகும். பெண்களாக இருந்தால் லட்சுமி அஷ்டோத்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லலாம் .சாமி படத்திற்கு கீழேயும் கல்லாப்பெட்டிக்கு கீழேயும் மஞ்சளில் ‘ஸ்ரீ லாபம் அட்சயா ‘என்று எழுத வேண்டும் .புது கணக்கு தொடங்குவதற்காக வாங்கியுள்ள நோட்டில் ‘ஸ்ரீ அக்ஷயா லாபம்’ என்று மஞ்சளில் முதல் பக்கத்தில் எழுத வேண்டும் .முதல் பக்கத்தில் 106 ரூபாய் ஸ்ரீ வெங்கடாஜலபதி என்று எழுதி அந்த பணத்தை தனியாக எடுத்து வைத்து ஏழுமலையானுக்கு கொண்டு செலுத்தும் வகையில் வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கும் ஒருவரிடம் இன்று ஏதேனும் ஒரு தொகையை வாங்கி புது கணக்கில் வரவு வைக்க வேண்டும். அது100 ரூபாயாக இருக்கலாம் …10 லட்சம் ரூபாயாக இருக்கலாம் .அது உங்கள் வியாபார பிரமுகரை பொறுத்தது. அந்த பணத்திலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து அதில் மஞ்சள் குங்குமம் புனுகு தடவி உங்கள் சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள் .பிறகு தேங்காய் உடைத்து பத்தி சூடம் காட்டி இன்னொரு தேங்காயில் சூடத்தை வைத்து கொளுத்தி வெளியில் கடை முன்பு சிதறு காய் உடைக்க வேண்டும். பின்னர் சாமிக்கு படைத்த லட்டு உள்ளிட்ட மஞ்சள் வண்ண இனிப்புகளை மற்றவர்களுக்கு விநியோகம் செய்யலாம். மேலும் ஏற்கனவே வாங்கி வைத்த பூசணிக்காயை வழக்கம்போல் திருஷ்டிக்காக உடைப்பது போல் கடைக்கு முன்பு உடைத்து விட வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் தங்கள் சட்டை பையில் கொண்டு வந்த ரூபாயை சாமிக்கு முன்பாகவோ அல்லது அங்கே தங்கள் வைத்திருக்கும் பணப்பெட்டிகளிளோ வைத்து விட வேண்டும். இப்படி பூஜை செய்து புது கணக்கை இன்று மாலையில் தொடங்குங்கள்….கோடி கோடியாய் உங்கள் வருவாயை பெருக்குங்கள்.!
