சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடுநிலைப்பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். 2 ஆயிரத்து நடுநிலைப்பள்ளிகள், 540 உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடி செலவில் அமைக்கப்படும். அரசு 7 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 25 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மாதிரி பள்ளிகள் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் தலா ,ஒரு மாதிரி பள்ளி என்ற நிலை உருவாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். வேலைவாய்ப்புக்காக வாசிப்பு திறனை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் மேம்படுத்தப்படும் .அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் முன்பு 15 நாட்கள் கற்றல், கற்பித்தல் மற்றும் அடிப்படை நிர்வாக பயிற்சி வழங்கப்படும். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு ஆய்வகங்கள் தேவையான தரம் உயர்த்தப்படும். உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இடம்பெயர்ந்து வரும் பிற மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் தாய்மொழியுடன் தங்குதடையின்றி தமிழில் பேசவும், எழுதவும் கற்போம் இயக்கம் தொடங்கப்படும். மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற திறனை ஆசிரியர், பெற்றோர் முன்னிலையில் வெளிப்படுத்தும் வகையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டுவிழா நடத்தப்படும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். பாடங்களுக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர் என்ற வகையில்,6 முதல் 8 வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்டு செயல்படும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒருவர் குறைந்தபட்சம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மின்னுருப் புத்தகங்கள் 1 முதல் 12ம் வகுப்பு வரை, பார்வைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களின் பயன்பாட்டுக்காக மின்னுருப்பு புத்தகங்கள் உருவாக்கப்படும். சிறைகளில் உள்ள முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத ஆயிரத்து 249 சிறைவாசிகளுக்கு அடிப்படை கல்வி எழுத்தறிவு வழங்கிடும் வகையில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படும். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருது வழங்கப்படும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் மற்றும் அரிய நூல்கள், குழுவால் தேர்வு அறிஞர் செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் தனி வெளியீடாகவோ, கூட்டு வெளியீடாகவோ கொண்டு வரப்படும். ஐந்து இலக்கியத் திருவிழாக்களுடன் இணைந்து இளைஞர் இலக்கியத் திருவிழா நடத்தப்படும். கன்னிமாரா கிளை நூலகத்தில் நவீன வசதிகளுடன் சிறப்பு பிரிவுகள் தொடங்கப்படும். அனைத்து மாவட்ட மைய நூலகங்கள், முழுநேரகிளை நூலகங்கள் படிப்படியாக அரசு நூல்கள் ,குழந்தை தமிழில் கொண்டு புதுப்பிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
